TNPSC Thervupettagam

முதல் இந்தியப் புவியியல் பாரம்பரியத் தளம்

November 2 , 2022 627 days 341 0
  • சர்வதேசப் புவியியல் அறிவியல் சங்கமானது (IUGS), முன்னணி 100 சர்வதேச புவியியல் அறிவியல் சங்க புவியியல் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக மவ்ம்லு குகையை அங்கீகரித்துள்ளது.
  • இது மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • 7.2 கிமீ நீளம் கொண்ட மவ்ம்லு குகை இந்தியத் துணைக் கண்டத்தின் நான்காவது மிக நீளமான குகையாகும்.
  • குகை பல திறப்புகளைக் கொண்ட நீண்ட சிக்கலான பாதை நிறைந்த அறை மற்றும் சுண்ணக்கல் பாறை, பொங்கூசிப் பாறை, நெடுவரிசைகள், திரைச்சீலைகள் மற்றும் நிலவு பால் ஆகிய வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குகையின் மற்றொரு முக்கிய அம்சமானது, இந்தக் குகையின் வழியாக செல்லும் ஐந்து வெவ்வேறு ஆறுகளிலிருந்து உருவாகிய அதனுள் அமைந்துள்ள குளம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்