Voices for Asian Elephants எனப்படும் (ஆசிய யானைகளுக்கான முன்னெடுப்புகள்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமானது ஊட்டியின் கூடலூரில் உள்ள தேவர்சோலையில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு இயந்திர யானை ஒன்றினை வழங்கியுள்ளது.
கோவில்களில் யானைகளானவை சுகாதாரமற்ற முறையிலும், மனிதாபிமானமற்ற முறையிலும் பராமரிக்கப் படுவது குறித்து அடிக்கடி வெளியாகும் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இந்த இயந்திர யானைகள் ஏற்கனவே கேரளா முழுவதும் உள்ள கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கப் பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வழங்கப்படும் முதல் இயந்திர "யானை" இது ஆகும்.
கேரளாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் தனியாரால் பராமரிக்கப்பட்ட 25 யானைகள் இறந்துள்ளன என்பதோடு, 2024 ஆம் ஆண்டில் ஏற்கனவே மூன்று யானைகள் இறந்து உள்ளன.
யானைகளை அடைத்து வைத்து துன்புறுத்தாமல், அதே சமயம் நாட்டின் கலாச்சாரம் இன்றும் பேணப் படுவதை இந்த இயந்திர யானைகள் உறுதி செய்ய உதவும்.