இந்திய ரிசர்வ் வங்கியானது, முதல் இழப்பு இயல்புநிலை உத்தரவாதக் கட்டமைப்பிற்கு (FLDG) தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது, இந்திய நிதிசார் தொழில்நுட்ப வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுடன் பங்குதாரராக இணைய வழி வகுக்கிறது.
இந்த முடிவானது தரவு-தொழில்நுட்பம் சார்ந்த வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான மிகவும் ஒரு சாதகமான நடவடிக்கையாக பார்க்கப் படுகிறது.
மேலும், இந்த நடவடிக்கையானது எண்ணிமக் கடன் வழங்கீட்டுச் சூழலை நன்கு வலுப் படுத்தும்.
இது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் (REs) மற்றும் கடன் வழங்கீட்டுச் சேவை வழங்கும் நிறுவனங்கள் (LSPs) அல்லது இரண்டு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையேயான இயல்புநிலை இழப்பு உத்தரவாத நடவடிக்கையானது (DLG) பொதுவாக FLDG என அழைக்கப் படுகிறது.