ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான ஓர் – முயற்சியாக, மெஹ்பூபா முப்தி தலைமையிலான அரசானது ஜூலை மாதத்தின் இறுதியில் மாநிலத்தின் முதல் “உலக முதலீட்டாளர்கள் சந்திப்பை” (Global Investors Meet) நடத்த உள்ளது.
மாநிலத்தில் 20,000 மெகாவாட்ஸ் ஆற்றல் கொண்ட நீர்மின் ஆற்றலைப் பயன்பாட்டிற்குத் திரட்டுவதற்காக இச்சந்திப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 2017 ஆம் ஆண்டின் மாநில பொருளாதார ஆய்வறிக்கையின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலமானது மாநிலத்தின் ஆற்றல் தேவை படிப்படியாக உயர்ந்து வரும் வேளையில் அது மிகப்பெரிய தேவை அளிப்பு இடைவெளியை (demand-supply gap) உண்டாக்கிய போதும் மொத்தம் மதிப்பிடப்பட்ட 20,000 மெகாவாட் நீர்மின் ஆற்றல் திறனில் வெறும் 16 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.