நாசா அமைப்பானது ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் மூலம் ‘மேற்பரப்பு நீர் மற்றும் கடல் நிலப்பரப்பு‘ (Surface Water and Ocean Topography - SWOT) என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது.
இந்தச் செயற்கைக்கோள் விண்வெளியில் இருந்து பூமியின் நன்னீர் அமைப்புகளின் முதல் உலகளாவிய ஆய்வை எடுக்கும்.
SWOT என்பது விஞ்ஞானிகளுக்குக் கடல்கள் மற்றும் காலநிலை மாற்றம் அதனை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு மேம்படுத்தப் பட்ட ரேடார் செயற்கைக்கோள் ஆகும்.
இந்த செயற்கைக்கோள் கடல் நீர்மட்ட அம்சங்களை தற்போது சாத்தியமுள்ளதை விட பத்து மடங்கு துல்லியமாக அளவிட முடியும்.
இதனால் பூமியில் உள்ள ஒரு மில்லியன் ஏரிகள் மற்றும் ஆறுகளை அளவிட முடியும்.
இந்த செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலமாக வெள்ள முன்னறிவிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்தவும் முடியும்.