உலக வனஉயிர் நிதியம் – இந்தியா {World Wildlife Fund (WWF)-India} அமைப்புடன் இணைந்து பஞ்சாப் மாநில அரசானது சிந்துநதி டால்பின்களின் (Indus Dolphins) முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
சிந்துநதி டால்பின்களானது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே காணப்படும் உலகின் மிகவும் அரிதான பாலூட்டிகளில் ஒன்றாகும்.
பஞ்சாப் மாநிலத்தின் பியாஸ் நதியில் (Beas River) உள்ள தல்வாரா மற்றும் ஹரிகே அணைக்கட்டிற்கிடையேயான (Talwara and Harike Barrage) 185 கிலோ மீட்டர் நீள நதிப் படுகையில் 5 நாட்களுக்கு இந்த முதல் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பகுதியில் மட்டுமே நதிவாழ் நன்னீர் சிந்துநதி டால்பின்கள் (riverine fresh water Indus Dolphins) காணப்படுகின்றன.
நதிவாழ் நன்னீர் டால்பின்களின் (freshwater river dolphin) துணை இனமே சிந்துநதி டால்பின்களாகும். இந்தியாவின் கங்கைநதி டால்பின்களும் (Ganges River dolphin) நன்னீர்வாழ் டால்பின்களின் துணை இனமாகும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழியே பாய்கின்ற சிந்துநதி மற்றும் அதன் துணை நதிகளான பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளில் சிந்துநதி டால்பின்கள் காணப்படுகின்றன.
சிந்துநதி டால்பின்களானது பாகிஸ்தானின் தேசியப் பாலூட்டியாகும் (national mammal of Pakistan). இவை நதியினுடைய சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் முக்கிய குறியீட்டு இனமாகும் (key indicator species of river’s health).
சர்வதேச பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் சிந்துநதி டால்பின்களானது அதனுடைய அச்சுறுத்தப்பட்ட இனங்களின் சிவப்பு பட்டியலில் (Red List of Threatened Species) அருகிவரும் இனமாக (endangered Species) பட்டியலிடப்பட்டுள்ளது.