TNPSC Thervupettagam

முதல் ஓங்கில் (டால்பின்) ஆராய்ச்சி மையம்

March 8 , 2021 1233 days 767 0
  • இந்தியாவின் மற்றும் ஆசியாவின் முதலாவது தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையமானது பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் கங்கைக் கரையில் அமைய இருக்கின்றது.
  • ஓங்கில் என்பது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 என்ற சட்டத்தின் அட்டவணை I என்பதின் கீழ் மிகவும் அருகி வரும் ஒரு உயிரினமாக பட்டியலிடப் பட்டுள்ளது.
  • இது 2009 ஆம் ஆண்டில் தேசிய நீர்வாழ் விலங்கு என்று அறிவிக்கப்பட்டது.
  • உலகில் உள்ள நான்கு நன்னீர் டால்பின்களில் கங்கை டால்பின் இனமும் ஒன்றாகும்.
  • மற்ற மூன்று இனங்கள் பின்வருவனவற்றில் காணப்படுகின்றன
    • யாங்சே நதி,
    • சிந்து நதி மற்றும்
    • அமேசான் நதி.
  • கங்கையில் டால்பின்கள் வசிப்பது ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பின் அடையாளத்தைக் காட்டுகின்றது, ஏனெனில் டால்பின்கள் குறைந்தது 5 அடி முதல் 8 அடி வரையுள்ள ஆழமான நீரில் வாழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்