முதல் கூட்டு புலிகள் கணக்கெடுப்பு – நேபாளம் மற்றும் இந்தியா
October 4 , 2017 2738 days 1037 0
அடுத்த மாதத்தில் நேபாளமும் இந்தியாவும் கூட்டாக இணைந்து முதன்முறையாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட முறையில் தங்கள் எல்லையை ஒட்டிய பகுதிகளுக்குட்பட்ட தேசிய பூங்காக்கள், காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆகிய இடங்களில் புலிகள் கணக்கெடுப்பைத் துவங்கவுள்ளன.
புலிகள் உலவும் நாடுகள் (TRC - Tiger Range Countries) என்பது புலிகள் சுதந்திரமாக உலவும் பகுதிகள் ஆகும்.
13 புலிகள் உலவும் நாடுகளாவன- வங்கதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், ரஷ்யா, நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகும்.
அருகிவரும் இனங்களின் மீதான சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் (CITES-Convention On International Trade In Endangered Species ) பட்டியலின் கீழ் புலிகள் ஒரு அருகிவரும் (Endangered Species) இனமாகும்.
உலக வன நிதியத்தின் (WWF-WORLD WILDLIFE FUND) தகவல் படி புலிகள் தங்களது வழக்கமான வாழ்விடங்களில் 93 சதவீதத்தை இழந்து விட்டிருக்கின்றன. மனித வனவிலங்கு மோதல், பருவநிலை மாற்றம், வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வியாபாரம் போன்றவை புலிகளை அருகிவரும் இனங்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான காரணங்களாகும். இதனால் வரும் காலங்களில் புலிகள் முழுமையாக அழிந்துவிடக் கூடிய அபாய நிலையில் உள்ளன.
நேபாளத்தில் சித்வானில் உள்ள சித்வான் தேசியப் பூங்காவும், பார்சா வனவிலங்கு காப்பகமும் பீகாரில் உள்ள வால்மீகி புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ளன. அதேபோல நேபாளத்தின் பார்டியா தேசிய பூங்கா இந்தியாவின் கடார்நியாகாட் வனவிலங்கு சரணாலயத்தையொட்டியும், நேபாளத்தின் சுக்லாபந்த் தேசிய பூங்கா இந்தியாவின் தூத்வா புலிகள் காப்பகத்தை ஒட்டியும் அமைந்துள்ளன.