இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (National Highways Authority of India (NHAI) மியான்மரில் உள்ள யாக்யி – கலேவா நெடுஞ்சாலைப் பிரிவை (Yagyi – Kalewa section) இந்தியாவின் கிழக்குப் பகுதியோடு இணைந்த இருவழிப்பாதையாக (two lane) மேம்படுத்துவதற்கு மியான்மர் அரசுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இத்திட்டமானது இந்தியா – மியான்மர் – தாய்லாந்து ஆகியவற்றிற்கிடையேயான முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டத்தின் {India-Myanmar-Thailand (IMT) Trilateral Highway} ஒரு பகுதியாகும். மேலும் இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முதல் சர்வதேச திட்டம் ஆகும்.
தெற்காசிய பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையேயான இணைப்பினை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் கிழக்கு செயற்பாட்டு கொள்கையின் (Act East policy) கீழ் கட்டப்பட்டு வரும் பிராந்திய நெடுஞ்சாலையே IMT முத்தரப்பு நெடுஞ்சாலையாகும்.
இந்த நெடுஞ்சாலையானது மியான்மரின் வழியே இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மோரெ (Moreh) பகுதியை தாய்லாந்து நாட்டின் மே சோட் (Mae- Sot) பகுதியுடன் இணைக்கும்.
இந்த நெடுஞ்சாலையானது ஆசியான் – இந்தியா தடையற்ற வர்த்தக பகுதிகளிலும் (ASEAN–India Free Trade Area), அதனோடு பிற தென்கிழக்காசியப் பகுதிகளிலும் (Southeast Asia) வணிகம் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய அரசின் மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்தினால் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகின்றது.
1177 கோடி ரூபாய் செலவில் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் எனும் முறையின் (Engineering, Procurement and Construction Mode - EPC mode) அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.