தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் தொடக்கத்தினை (Ayushman Bharat Yojana - National Health Protection Mission-AB-NHPM) குறிப்பதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூரில் நாட்டின் முதல் சுகாதாரம் மற்றும் நல் வாழ்வு மையத்தை (Health and Wellness Centre) பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
மோடிகேர் (Modicare) என்று அழைக்கப்படும் ஆயுஷ்மான் பாரத் எனும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமானது 2018 ஆம் ஆண்டின் மத்தியப் பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
10,500 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டு ஆதரவோடு 2018 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் மத்திய கேபினெட் இத்திட்டத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது.
2011-ஆம் ஆண்டின் சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பின் (Socio Economic and Caste Census 2011-SECC) தரவு தளத்தின் அடிப்படையில் ஏழை மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்கள் தொகையைச் சேர்ந்த 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ சுகாதார காப்பீட்டு வசதியை வழங்குவதே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நோக்கமாகும்.
அரசினால் நிதியுதவி அளிக்கப்படுகின்ற உலகின் மிகப்பெரிய மருத்துவ சிகிச்சை சேவை திட்டம் இதுவேயாகும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அமல்பாட்டிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்காகவும், திறம்பட்ட அமல்பாட்டிற்கு கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குவதற்காகவும் உச்ச அளவில் ஆயுஷ்மான் பாரத் - தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டக் குழு ஒன்றும் இத்திட்டத்தின் அமைக்கப்படும்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சர் இக்கவுன்சிலின் தலைவராவார்.