TNPSC Thervupettagam

முதல் செயற்கைக் கோள் பழுதுபார்க்கும் விண்கலம்

October 14 , 2019 1743 days 636 0
  • கஜகஸ்தானில் உள்ள விண்கலங்களுக்காக ரஷ்யாவின் ஏவுதளத்திலிருந்து செலுத்தப் பட்ட ரஷ்ய புரோட்டான் ராக்கெட்டின் மூலமாக “MEV-1” (திட்டம் நீட்டிப்பு வாகனம் -1) என்று பெயரிடப்பட்ட முதல் செயற்கைக் கோள் சேவை விண்கலம் விண்ணில் ஏவப் பட்டுள்ளது.
  • வணிக விண்வெளித் திறன்களுக்கான ஒத்துழைப்புகள் எனப்படும் நாசா கூட்டாண்மை அமைப்புடன் இணைந்து அமெரிக்காவின் நார்த்ரோப் க்ரூமன் என்ற அமைப்பு இதை உருவாக்கியுள்ளது.
  • குறைவான எரிபொருளால் இயங்கும் மற்றும் தனக்குத்  தேவையான எரிபொருளைத் தானே  நிரப்புகின்ற வகையில் செயல்படும் இந்த MEV விண்கலம் விண்வெளியில் உள்ள எந்த செயற்கைக் கோளையும் கண்டுபிடிப்பதிலும் அவற்றை இணைப்பதிலும் பயன்படுகிறது.
  • எனவே, தற்போது பூமியைச் சுற்றியுள்ள புவிசார் சுற்றுப்பாதையில் இருக்கும் வணிக செயற்கைக் கோள்களின் ஆயுளை நீட்டிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்