முதல் தாவரம் சார்ந்த சிகா தடுப்பூசி உருவாக்கப்பட்டது
August 25 , 2017 2647 days 966 0
முதன்முதலில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலப் பல்கலைகழகத்தைச் (ASU) சேர்ந்த விஞ்ஞானிகள், தாவரம் சார்ந்த சிகா தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர், இது சிகா நோய்க்காக உருவாக்கப்பட்ட பிற மருந்துகளை விட அதிக சக்திவாய்ந்த, பாதுகாப்பான மற்றும் மலிவானதாகவும் இருக்கும்.
புகையிலைத் தாவரத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி முக்கிய புரதமான DIII யை குறிவைக்கிறது. இப்புரதமானது ஜிகா (Zika) வைரஸை வெளிப்புறமாக சூழ்ந்து மறைக்கிறது. மேலும் வைரஸ் நோய் தொற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது .
எலியின் மீது செய்யப்பட்ட நோய்த் தடுப்பு பரிசோதனைகள், ஜிகா வைரசிற்கு எதிராக ஆன்டிபாடிகளை செலுத்துவதிலும் செல்லுலார் நோயெதிர்ப்பை ஊக்குவிப்பதிலும் 100 சதவிகிதம் வெற்றி கண்டன.
உலகெங்கிலும் உள்ள ஜிகா அச்சுறுத்தல் முதலில் 2015 ல் உருவானது. அது மில்லியன் கணக்கான மக்களின் இறப்பிற்கும் , மேலும் பிறப்புக் குறைபாடுகளுடன் கூடிய குழந்தைகளின் பிறப்பிற்கும் வழிவகுத்தது