TNPSC Thervupettagam

முதல் தாவரம் சார்ந்த சிகா தடுப்பூசி உருவாக்கப்பட்டது

August 25 , 2017 2647 days 965 0
  • முதன்முதலில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலப் பல்கலைகழகத்தைச் (ASU) சேர்ந்த விஞ்ஞானிகள், தாவரம் சார்ந்த சிகா தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர், இது சிகா நோய்க்காக உருவாக்கப்பட்ட பிற மருந்துகளை விட அதிக சக்திவாய்ந்த, பாதுகாப்பான மற்றும் மலிவானதாகவும் இருக்கும்.
  • புகையிலைத் தாவரத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி முக்கிய புரதமான DIII யை குறிவைக்கிறது. இப்புரதமானது ஜிகா (Zika)  வைரஸை வெளிப்புறமாக சூழ்ந்து மறைக்கிறது. மேலும் வைரஸ் நோய் தொற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது .
  • எலியின் மீது செய்யப்பட்ட நோய்த் தடுப்பு பரிசோதனைகள், ஜிகா வைரசிற்கு எதிராக ஆன்டிபாடிகளை செலுத்துவதிலும்  செல்லுலார் நோயெதிர்ப்பை ஊக்குவிப்பதிலும்  100 சதவிகிதம் வெற்றி கண்டன.
  • உலகெங்கிலும் உள்ள ஜிகா அச்சுறுத்தல் முதலில் 2015 ல் உருவானது. அது மில்லியன் கணக்கான மக்களின் இறப்பிற்கும் , மேலும் பிறப்புக் குறைபாடுகளுடன் கூடிய  குழந்தைகளின் பிறப்பிற்கும் வழிவகுத்தது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்