TNPSC Thervupettagam

முதல் திலபியா பர்வோவைரஸ் பாதிப்பு

October 20 , 2023 402 days 394 0
  • இந்தியாவில் முதன்முறையாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் உள்ள குளங்களில் திலபியா பர்வோவைரஸ் (TiPV) பாதிப்பு பதிவாகியுள்ளது.
  • இது பண்ணையில் வளர்க்கப்படும் திலாப்பியா எனப்படும் நன்னீர் மீன் இனத்தைப் பாதித்து, அவற்றில் பெரிய அளவிலான இறப்பு விகிதத்தை ஏற்படுத்துகிறது.
  • இந்த டிஎன்ஏ வைரஸ் மீன் பண்ணையில் 30 முதல் 50% வரையிலும், ஆய்வகத்தில் 100% வரையிலும் இறப்பை ஏற்படுத்தியது.
  • “ஒரு ஏழை-மக்களின் மீன்” என்று கருதப்படும் மொசாம்பிக் திலாபியா 1950 ஆம் ஆண்டுகளில் இந்திய நன்னீர்நிலைகளில் விடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது தமிழில் ஜிலேபி என்றும் அழைக்கப்படுகிறது.
  • TiPV பாதிப்பானது, முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் சீனாவிலும், 2021 ஆம் ஆண்டில் தாய்லாந்திலும் பதிவாகியுள்ளது.
  • TiPV பாதிப்பு பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ள மூன்றாவது நாடு இந்தியாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்