புது டெல்லியில், முதலாவது தேசிய மெட்ரோ இரயில் தகவல் மையத்தினை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேசிய மெட்ரோ இரயில் தகவல் மையமானது, இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் அமைந்துள்ள மெட்ரோ வலையமைப்புகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளின் விரிவாக்கம் பற்றிய தகவல்களை வழங்கும்.
இந்தக் கட்டிடமானது, இந்திய மெட்ரோ இரயில் வலையமைப்புகளுக்கான தகவல் மற்றும் புதுமையாக்க மையமாக செயல்படுவதனை நோக்கமாகக் கொண்டதாகும்.
இது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான ஒரு தளத்தை இது வழங்கும்.