TNPSC Thervupettagam

முதல் நீலகிரி வரையாடு தினம்

October 11 , 2023 411 days 3768 0
  • தமிழ்நாடு அரசானது முதலாவது ‘நீலகிரி வரையாடு தினத்தினை’ அக்டோபர் 07 ஆம் தேதியன்று கொண்டாடியது.
  • மாநில அரசானது, E.R.C. டேவிதார் அவர்களின் நினைவாக இந்தத் தேதியை நீலகிரி வரையாடு தினமாக தேர்வு செய்துள்ளது.
  • இவர் 1960 ஆம் ஆண்டுகளில் தென்னிந்தியாவின் ஒரேயொரு மலைவாழ் குளம்பு விலங்கு பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்து மேற்கொண்ட வனவிலங்கு வளங்காப்பாளர் ஆவார்.
  • இவர் 1963 ஆம் ஆண்டில் நீலகிரிப் பகுதிகளில் நீலகிரி வரையாடுகளின் முதல் எண்ணிக்கைக் கணக்கெடுப்பை மேற்கொண்டார் என்பதோடு, மேலும் நீலகிரியில் 38 விலங்குகளைக் கொண்ட ஒரு பெரிய மந்தை உட்பட சுமார் 400 வரையாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
  • இவர் 1975 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் காணப்படும் நீலகிரி வரையாடுகள் பற்றிய விரிவானக் கணக்கெடுப்பினை மேற்கொண்டு அங்கு சுமார் 2,200 வரையாடுகள் இருப்பதாக மதிப்பிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்