TNPSC Thervupettagam

முதல் பசுமை எஃகு உற்பத்தி வகைபிரித்தல்

December 19 , 2024 7 days 79 0
  • எஃகுத் தொழில் துறையினை கார்பன் நீக்கம் செய்வதனை நோக்கமாகக் கொண்ட உலகின் முதல் பசுமை எஃகு உற்பத்தி வகைப் பிரிப்பு முறையை இந்தியா அறிமுகப் படுத்தியுள்ளது.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் இந்திய நாட்டின் நிகர சுழிய உமிழ்வு இலக்குகளை ஆதரிக்கும் வகையில், பசுமை எஃகு உற்பத்தி தரங்களை வகைப் பிரித்தல் வரையறுக்கிறது.
  • இந்த வகைபிரித்தல் ஆனது, உமிழ்வினுடைய தீவிரத்தின் அடிப்படையில் பசுமை எஃகு உற்பத்தியினை வகைப்படுத்துவதற்கு என்று ஒரு நட்சத்திர-மதிப்பீட்டு முறையை அறிமுகப் படுத்துகிறது.
  • ஐந்து நட்சத்திரப் பசுமை எஃகு என்ற ஒரு தரம் வழங்கப்படுவதற்கு, உற்பத்தி நிறைவு செய்யப் பட்ட ஒரு டன் எஃகுக்கு (tCO2/tfs) 1.6 டன்களுக்குக் குறைவான CO2 உமிழ்வு ஆக இருக்க வேண்டும்.
  • சுமார் 2.2 tCO2/tfsக்கும் குறைவான உமிழ்வைக் கொண்ட பசுமை முறையிலான எஃகு உற்பத்தியானது இந்தச் சான்றிதழினைப் பெறுவதற்குத் தகுதி பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்