தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரச் சபையின் சமீபத்திய அங்கீகார வழங்கீட்டு சுற்றில், இந்தப் பல்கலைக்கழகம் 3.59 மதிப்பெண்களைப் பெற்ற நிலையில், இது முன்னதாக பெற்ற 3.32 என்ற மதிப்பெண்ணில் இருந்து பெற்ற ஒரு சமீபத்திய முன்னேற்றம் ஆகும்.
பல்கலைக்கழக மானியக் குழுவானது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தரப் படுத்தப் பட்ட தன்னாட்சிக்கான ஒழுங்குமுறையைக் கொண்டு வந்தது.
இந்த அங்கீகாரத்தின் முக்கிய நன்மை என்னவென்றால், முதல் பிரிவு பல்கலைக் கழகங்கள் ஆனது பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியின்றி தனது கல்வித் திட்டங்களைத் தொடங்கலாம் என்பதோடு, மேலும் அது குறித்த அறிக்கையினைப் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (தரப்படுத்தப்பட்ட தன்னாட்சி ஒழுங்கு முறைகளை வழங்குவதற்கான பல்கலைக்கழகங்களின் வகைப்பாடு) 2018 ஆம் ஆண்டு குழுவானது, நாடு முழுவதும் உள்ள 60 நிறுவனங்களை முதல் பிரிவு கல்வி நிறுவனங்களாக அங்கீகரித்துள்ளது.