TNPSC Thervupettagam

முதல் பெண் இயக்குநர் – CIA

May 23 , 2018 2378 days 691 0
  • பழம்பெரும் உளவுத்துறையைச் சேர்ந்த நபரான கினா ஹேஸ்பெல் அமெரிக்காவின் உளவுத்துறையின் (Central intelligence Agency - CIA) முதல் பெண் இயக்குநராக உருவெடுத்துள்ளார். செனெட் அவையின் உறுதி செய்யும் வாக்கெடுப்பில் ஆறு ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்கள் குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து வாக்களித்ததால் இவர் வெற்றி பெற்றார்.
  • 9/11 தாக்குதலுக்குப் பிறகு உளவுத் துறையின் கடுமையான விசாரணைப் பணியில் ஹாஸ்பெல்லின் பங்கு குறித்த கவலைகள் நிராகரிக்கப் பட்டுவிட்டன.
  • ஹாஸ்பெல் CIA-ல் 33 ஆண்டுகாலம் முழுமையும் ரகசிய நடவடிக்கைகளிலேயே கழித்துள்ளார். 1973-ஆம் ஆண்டு வில்லியம் கோல்பி நியமிக்கப்பட்ட பிறகு, முதல் தொழில்நுட்ப நடவடிக்கைகள் அதிகாரியாக ஒரு பெண் நியமிக்கப்படுவது ஹாஸ்பெல்லே ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்