ஜப்பான் தனது முதலாவது பெண் போர் விமானியை நியமித்துள்ளது. இது பாரம்பரியமாக ஆணாதிக்கத்தில் உள்ள நாடுகளில் அதிக பாலின சமத்துவத்திற்கான தேசிய முயற்சியில் சமீபத்திய சாதனையாகும்.
ஜப்பானிய வான்வெளி தற்பாதுகாப்புப் படையின் முதல் பெண் போர் விமானியாக லெப்டினென்ட் மிசா மட்சுஷிமா (26) ஆகியுள்ளார்.
போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்களின் விமானிகளைத் தவிர அனைத்துப் பதவிகளையும் பெண்களுக்கு வழங்க 1993ஆம் ஆண்டு விமானப்படை முடிவு செய்தது. ஆனால் இந்த வரம்பு 2015ல் நீக்கப்பட்டது.