மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம், பார்கவுன்சிலிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண்ணாக இவர் உருவெடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதியையும் சேர்த்து மொத்தம் 31 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன.
நீதிபதி இந்து மல்கோத்ராவை சேர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
67 வருடங்களுக்குமுன் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இவர் உச்சநீதிமன்றத்தின் ஏழாவது பெண் நீதிபதியாவார். 1989 ஆம் ஆண்டு நீதிபதிபாத்திமா பீவி முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
2007 ஆம் ஆண்டு நீதிபதிபாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தால் மூத்த நீதிபதியாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணாவார். இந்தப் பெருமை, முதன் முதலாக பழம்பெரும் நீதிபதி.லீலா சேத்திற்கு 1977 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.