TNPSC Thervupettagam

முதல் பெருங்கடல் ஒப்பந்தம்

June 22 , 2023 395 days 230 0
  • பெருங்கடல் பகுதிகளின் ஆளுமைக்காகவும், மனிதக் குலத்திற்கு இன்றியமையாத தொலை தூரச் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்குமான முதல் சர்வதேச ஒப்பந்தத்தினை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது.
  • இது தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் மீதான ஒப்பந்தம் என்று அதிகாரப் பூர்வமாக அழைக்கப்படுகிறது.
  • சர்வதேச கடற்பகுதியில் மீன்பிடித்தல், சுரங்கம் மற்றும் எண்ணெய் பிரித்தெடுத்தல் போன்ற நடவடிக்கைகளைப் பாதுகாத்தல் மற்றும் நிர்வகிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 60 உறுப்பினர் நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • கடல்சார் மரபணு வளங்களின் நன்மைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான பல்வேறு கொள்கைகளை இந்த ஒப்பந்தம் நிறுவுகிறது.
  • பூமியின் மேற்பரப்பின் 60 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பில் பெருங்கடல்கள் பரவிக் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்