நாட்டின் முதல் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டிற்கான உச்சி மாநாட்டை (NEDS – North East Development Summit – 2017) மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
டெல்லியைச் சேர்ந்த சிந்தனையாளர் குழுவான இந்தியா பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து மணிப்பூர் அரசும், மத்திய அரசும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
வட கிழக்கு மாநிலங்களின் பொருளாதார ஆற்றல் வளத்தை வெளிக்காட்டவும், ரியல் எஸ்டேட், உணவு பதனிடல், மூங்கில் தொழிற்துறை, மற்றும் பிற வர்த்தக வியாபாரங்களில் முதலீட்டை கவர்வதற்கும் இம்மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளின் வடகிழக்கு மாநிலங்கள் மீதான எண்ணத்தை மாற்றுவதற்காகவும், அவர்களிடத்தில் நம்பிக்கையை கட்டமைப்பதற்காகவும் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.