TNPSC Thervupettagam

முதல் வணிக செயற்கைக் கோள் அகலப் பட்டை அலைக்கற்றைச் சேவை

September 20 , 2022 800 days 425 0
  • ஹியூஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா (HCI) நிறுவனமானது இஸ்ரோவுடன் இணைந்து அதன் முதல் உயர் செயல்திறன் செயற்கைக்கோள் (HTS) மூலமான அகலப் பட்டை அலைக்கற்றை இணையச் சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
  • இது இஸ்ரோவின் Ku-கற்றைத் திறன் கொண்ட ஜிசாட்-11 மற்றும் ஜிசாட்-29 ஆகிய செயற்கைக் கோள்களைப் பயன்படுத்துகிறது.
  • இது வழக்கமான செயற்கைக்கோளின் அதே அளவு சுற்றுப்பாதைக்கான அலைக் கற்றையினைப் பயன்படுத்துவதால் ஒரு பிட் என்ற இணையச் சேவைக்கு ஆகும் செலவைக் குறைக்கும் அளவுக்கு அதன் திறனை அதிகரிக்கிறது.
  • இது இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான செயற்கைக்கோள் அகலப் பட்டை அலைக் கற்றைச் சேவையாகும்.
  • இது மிகவும் குறைந்த விலை அலைவரிசை மற்றும் அதிக பயனர் அனுபவத்தை வழங்குகிறது.
  • இது வடகிழக்குப் பகுதி முதல் லே மற்றும் லடாக்கின் தொலைதூரப் பகுதிகள் வரை இந்தியா முழுவதும் உள்ள தொலைதூர இடங்களுக்கு அதிவேக செயற்கைக்கோள் அகலப் பட்டை அலைக்கற்றைச் சேவைகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்