TNPSC Thervupettagam

முதல் வர்த்தக கண்காணிப்பு அறிக்கை

December 9 , 2024 13 days 66 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, 2025 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டிற்கான வர்த்தகக் கண்காணிப்பு காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நாட்டின் வர்த்தக மாற்றங்கள் பற்றிய விரிவான கண்ணோட்டமாகும்.
  • 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் மொத்த வர்த்தகச் செயல்பாட்டுத் திறன் ஆண்டிற்கு (YoY) 5.45% வளர்ச்சியுடன் 576 பில்லியன் டாலரை எட்டியது.
  • இதன் மூலம் ஏற்றுமதியானது சுமார் 231 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இது 5.41% என்ற மிதமான ஏற்றுமதி அதிகரிப்பைப் பிரதிபலிப்பதோடு இறக்குமதியானது 345 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • இதன் ஒரு விளைவாக 9.7 பில்லியன் டாலர் மதிப்பில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தது.
  • சேவைகள் ஏற்றுமதியானது ஆண்டிற்கு 10.09% அளவிற்கு அதிகரித்து 89 பில்லியன் டாலரை எட்டியது.
  • உலகளாவியச் சந்தைகளில், தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் பிற வணிகத் தீர்வுகள் முறையே 10.2% மற்றும் 7.16% பங்குகளைக் கொண்டுள்ளன.
  • இந்தியாவின் ஏற்றுமதியில் முறையே 21% மற்றும் 18.6% என்ற அளவுப் பங்குடன் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியப் பொருட்களுக்கான முக்கியச் சந்தைகளாக தொடர்ந்து திகழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்