இந்தியாவில், பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தினால் அங்கீகரிக்கப் பட்ட நிலையில் தற்போது 36 விமானப் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன.
பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகமானது ஒரு புதிய விமான பயிற்சிப் பள்ளியைத் தொடங்க EKVI விமானப் பயிற்சி ஆர்கனைசேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தனது ஒப்புதலை அளித்தது.
இது சேலம் விமான நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் முதல் விமானப் பயிற்சி அமைப்பு (FTO) இதுவாகும்.