இந்தத் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் பஞ்சாயத்து ஒன்றியங்களில் சாலைகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசானது 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
மொத்த தொகையான 1,000 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த திரட்டப்பட்ட வருவாய்த் (SCPAR) திட்டக் கூறுகளிலிருந்து 344 கோடி ரூபாய், மூலதன மானிய நிதியிலிருந்து (CGF) (மாவட்டம்) 200 கோடி ரூபாய், CGF (மாநிலம்) நிதியிலிருந்து 300 கோடி ரூபாய் மற்றும் CGF (பிற மாவட்ட சாலைகள்) 156 கோடி ரூபாய் ஆகியவை அடங்கும்.
2025-26 ஆம் ஆண்டில் சுமார் 2,500 கி.மீ. தூர சாலை மேம்பாட்டுத் திட்டங்களை மேற் கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.