TNPSC Thervupettagam

முதியோர் சேமிப்புத் திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி விதிகள்

November 15 , 2023 249 days 214 0
  • பிரபலமான முதியோர் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் 5 ஆண்டு அஞ்சல் அலுவலக கால வரம்பு வைப்புத் திட்டத்தில் அரசாங்கம் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
  • 55 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 60 வயதுக்குக் குறைவான ஓய்வு பெற்ற தனிநபருக்கு முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குப் பதிலாக தற்போது மூன்று மாதங்கள் வழங்கப்படும்.
  • இந்தப் புதிய விதிகள் ஆனது, ஓர் அரசு ஊழியரின் மனைவி, இந்த நிதி உதவித் தொகை திட்டத்தில் முதலீடு செய்ய வழி வகை செய்கிறது.
  • கணக்கு வைத்திருக்கும் ஒருவர் நீட்டிப்பு எண்ணிக்கை வரம்புகள் எதுவுமின்றி ஒவ்வொரு தொகுதியையும் மூன்று ஆண்டு என்று கால வரம்பு கொண்ட கணக்கைத் தொடர்ந்து நீட்டிக்க முடியும்.
  • முன்னதாக, ஒரு முறை மட்டுமே நீட்டிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
  • தற்போதுள்ள கணக்கு அல்லது கணக்குகளை நிறுத்துதல், அதற்கு எதிராக புதிய கணக்குகள் ஆனது அதிகபட்ச வைப்பு வரம்புக்கு உட்பட்டு வைப்புதாரரின் தேவைக்கேற்ப மீண்டும் திறக்கப் படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்