TNPSC Thervupettagam

முதியோர் மக்கள்தொகை கொண்ட சமூகம்

January 4 , 2025 18 days 93 0
  • 143 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, வயதான மக்கள் தொகையின் சவால்களைச் சமாளிப்பதற்கான அதன் தயார்நிலையில் இந்தியா 123வது இடத்தில் இருப்பதால் அதற்கான தயார் நிலையில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.
  • சுவிட்சர்லாந்து மிகவும் தயாராக உள்ள நாடாக முதலிடத்தில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து நார்வே மற்றும் டென்மார்க் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் 10வது இடத்தில் உள்ள நிலையில் ஐக்கியப் பேரரசு 14வது இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து ஜப்பான் (15), அமெரிக்கா (24), சீனா (46) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • இந்தியா தற்போது உலகின் இளைய (இளம் தலைமுறை கொண்டவர்) தேசமாக உள்ளதோடு அதன் மக்கள்தொகையில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் சுமார்65 சதவீதத்திற்கும் அதிகமானோர் 35 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.
  • தற்போது, ​​'நேச்சர் ஏஜிங்' தளத்தின் படி, இந்தியாவின் அண்டை நாடுகள் ஒப்பீட்டு அளவில் சிறப்பான தயார் நிலையில் உள்ளன என்ற நிலையில் மற்ற நாடுகள் நிலை வங்காள தேசம் (86), இலங்கை (94), நேபாளம் (102), மற்றும் பாகிஸ்தான் (118) ஆகும்.
  • உலகளாவிய சுகாதார அணுகலில் இந்தியா 106வது இடத்தில் உள்ளது.
  • கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இதில் சிறந்தச் செயல்திறன் கொண்டவையாக உள்ளன.
  • உணவுப் பாதுகாப்பில் இந்தியா 97வது இடத்திலும், டென்மார்க் இதில் சிறந்தச் செயல் திறன் கொண்ட நாடாகவும் உருவெடுத்துள்ளது.
  • ஓய்வூதியத்தில், அர்ஜென்டினா மற்றும் ஆர்மீனியா ஆகியவை சிறந்தச் செயல் திறன் கொண்டவையாக உள்ளன, இந்தியா இதில் 102 வது இடத்தில் உள்ளது.
  • மனநலம் சார்ந்த தரவரிசையில் குவைத் மிகவும் சிறந்த நாடாகவும், இந்தியா 93வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்