TNPSC Thervupettagam

முதுநிலை மேலாண்மைக் கல்வித் தரவரிசை 2022

September 18 , 2022 671 days 332 0
  • பைனான்சியல் டைம்ஸ் இதழானது அதன் 2022 ஆம் ஆண்டு பைனான்சியல் டைம்ஸ் முதுநிலை மேலாண்மைக் கல்வித் தரவரிசையினை (MiM) வெளியிட்டுள்ளது.
  • இது உலகின் சிறந்த வணிகக் கல்வி நிறுவனங்களை 16 வெவ்வேறு அளவுருக்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
  • முதுகலை கல்விப் படிப்பிற்கான உலகின் 100 சிறந்த வணிகக் கல்வி நிறுவனங்களை இந்தப் பட்டியல் குறிப்பிடுகிறது.
  • சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலன் பல்கலைக்கழகம் தொடர்ந்து 12வது ஆண்டாக இந்தப் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • நெதர்லாந்தின் எராஸ்மஸ் பல்கலைக்கழகம், HEC பாரீஸ் மற்றும் ரோட்டர்டாம் மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
  • 25 நிறுவனங்கள் இதில் இடம் பெற்றதன் மூலம் இந்தப் பட்டியலில் பிரான்ஸ் அதிக பிரதிநிதித்துவம் பெற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது.
  • இந்தப் பட்டியலில் இந்தியாவினைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
  • பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் இந்திய நிறுவனங்களில் 31வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் 47வது இடத்தில் இருந்து முன்னேறியுள்ளது.
  • இந்தப் பட்டியலில் உள்ள பிற இந்தியக் கல்வி நிறுவனங்களில் SP ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SPJIMR) 44வது இடத்திலும், லக்னோ இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM-L) 64வது இடத்திலும், உதய்ப்பூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM-U) 81வது இடத்திலும், இந்தூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM-I) 89வது இடத்திலும், மும்பை தேசிய மேலாண்மைக் கல்வி நிறுவனம் 96வது இடத்திலும் மற்றும் புது தில்லி சர்வதேச மேலாண்மைக் கல்வி நிறுவனம் 97வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்