பைனான்சியல் டைம்ஸ் இதழானது அதன் 2022 ஆம் ஆண்டு பைனான்சியல் டைம்ஸ் முதுநிலை மேலாண்மைக் கல்வித் தரவரிசையினை (MiM) வெளியிட்டுள்ளது.
இது உலகின் சிறந்த வணிகக் கல்வி நிறுவனங்களை 16 வெவ்வேறு அளவுருக்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
முதுகலை கல்விப் படிப்பிற்கான உலகின் 100 சிறந்த வணிகக் கல்வி நிறுவனங்களை இந்தப் பட்டியல் குறிப்பிடுகிறது.
சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலன் பல்கலைக்கழகம் தொடர்ந்து 12வது ஆண்டாக இந்தப் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நெதர்லாந்தின் எராஸ்மஸ் பல்கலைக்கழகம், HEC பாரீஸ் மற்றும் ரோட்டர்டாம் மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
25 நிறுவனங்கள் இதில் இடம் பெற்றதன் மூலம் இந்தப் பட்டியலில் பிரான்ஸ் அதிக பிரதிநிதித்துவம் பெற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியாவினைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் இந்திய நிறுவனங்களில் 31வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் 47வது இடத்தில் இருந்து முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள பிற இந்தியக் கல்வி நிறுவனங்களில் SP ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SPJIMR) 44வது இடத்திலும், லக்னோ இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM-L) 64வது இடத்திலும், உதய்ப்பூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM-U) 81வது இடத்திலும், இந்தூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM-I) 89வது இடத்திலும், மும்பை தேசிய மேலாண்மைக் கல்வி நிறுவனம் 96வது இடத்திலும் மற்றும் புது தில்லி சர்வதேச மேலாண்மைக் கல்வி நிறுவனம் 97வது இடத்திலும் உள்ளன.