TNPSC Thervupettagam

முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள் கண்டெடுப்பு

June 21 , 2023 396 days 225 0
  • ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சித் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறிய முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
  • இது ஆபரணங்களைக் குறிப்பாக சிறிய அளவிலான வளையல்களைக் கொண்டுள்ளது.
  • ஒரு சிறிய மண்டை ஓடு மற்றும் கை எலும்பு உள்ளே காணப்பட்டதால், அது ஐந்து முதல் எட்டு வயது வரையிலான குழந்தையாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
  • வெண்கலம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் கலவையால் ஆன நான்கு வளையல்கள் இதில் காணப் பட்டன.
  • குறிப்பாக முதுமக்கள் தாழிகளுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் என்பது ஒரு முக்கியமான தொல்லியல் அகழாய்வுத் தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்