TNPSC Thervupettagam

முத்தரப்பு தீர்வுசார் ஒப்பந்தம்

May 3 , 2023 444 days 238 0
  • மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் திமாசா தேசிய விடுதலை இராணுவம் / திமாசா மக்கள் உயர்நிலைச் சபை (DNLA/DPSC) பிரதிநிதிகளுக்கு இடையேயான ஒரு முத்தரப்பு தீர்வுசார் ஒப்பந்தமானது புது டெல்லியில் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, 168க்கும் மேற்பட்ட DNLA பிரிவினர் அரசிடம் தங்கள் ஆயுதங்களைச் சமர்ப்பித்து இயல்பு வாழ்க்கையில் இணைகின்றனர்.
  • இந்த ஒப்பந்தமானது அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் நிகழ்ந்து வந்த ஆயுதக் கிளர்ச்சிகளை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரும்.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், அசாம் மாநில அரசினால் திமாசா நலன்புரி சபை அமைக்கப் படும்.
  • இது ஒரு சமூக, கலாச்சார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாத்து, பிறகு அதன் வளத்தினைக் காத்து மற்றும் அதனை ஊக்குவிக்கச் செய்யும்.
  • இது, அவர்களின் அரசியல், பொருளாதார மற்றும் கல்வி சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அதன் தன்னாட்சிச் சபையின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ள திமாசா மக்களின் மீது விரைவான மற்றும் அதிக கவனத்துடன் கூடிய வளர்ச்சியினை உறுதி செய்வதற்கும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்