பெண்களுக்குக் கடன் வழங்குதலில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் தரவரிசைப் பட்டியலில் (PMMY - Pradhan Mantri Mudra Yojana) தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தத் தரவரிசையில் அதனையடுத்து மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
PMMY
PMMY ஆனது பெருநிறுவனம் அல்லாத சிறு மற்றும் நுண் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக வேண்டி 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் வரையில் கடன்கள் வழங்கப் படுகின்றன.
இந்தக் கடன்கள் ஊரக வட்டார வங்கிகள், வணிக வங்கிகள், சிறு நிதியியல் வங்கிகள், வங்கிச் சேவை அல்லாத நிதியியல் நிறுவனங்கள், நுண் நிதியியல் நிறுவனங்கள் ஆகியவற்றினால் வழங்கப் படுகின்றன.