நாட்டில் தொழில் முனைவினை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் பெறப்படும் முத்ரா கடன் தொகையின் வரம்பை அரசாங்கம் இரட்டிப்பாக்கியுள்ளது.
புதிய ‘தருண் பிளஸ்’ பிரிவின் கீழ் இது 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெருநிறுவனம் சாராத, வேளாண் சாராத சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள், வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்காக 10 லட்சம் ரூபாய் வரை எளிதான, எந்தவித பிணையமில்லாத சிறு கடன்கள் பெறுவதை எளிதாக்குவதற்காக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
2023-24 ஆம் ஆண்டில் PMMY திட்டத்தின் கீழ் 66.8 மில்லியன் கடன்கள் வழங்கப் பட்டு உள்ளன என்ற நிலையில் இதன் மதிப்பு 5.4 டிரில்லியன் ரூபாய் ஆகும்.