61வது முனிச் பாதுகாப்பு மாநாடு (MSC) ஆனது ஜெர்மனியின் முனிச் நகரில் நடத்தப் பட்டது.
பனிப்போரின் உச்ச கட்ட காலத்தின் போது, ஜெர்மன் நாட்டின் ஒரு அதிகாரி மற்றும் வெளியீட்டாளர் எவால்ட்-ஹெய்ன்ரிச் வான் க்ளீஸ்ட் என்பவரால் MSC நிறுவப்பட்டது.
1963 ஆம் ஆண்டில் தொடங்கி, இந்த மாநாடு ஆனது அதன் ஆரம்பத்தில் இராணுவப் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தியது என்பதோடு இதில் சில மேற்கத்திய நாடுகளும் அவற்றின் உயர் அதிகாரிகளுமே பிரதானமாக கலந்து கொண்டனர்.
1991 ஆம் ஆண்டில் பனிப்போர் முடிவடைந்த பிறகு, இந்த மாநாடு ஆனது அதன் செயல் பாட்டு நிரலைப் பாதுகாப்பு மற்றும் காவலுக்கு அப்பால் பருவநிலை மாற்றம் மற்றும் புலம்பெயர்வு போன்ற பிரச்சினைகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியது.
இது ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட கிழக்கு நாடுகளின் தலைவர்களையும் இதில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கத் தொடங்கியது.
ஆனால் 2023 ஆம் ஆண்டில், 20 ஆண்டுகளில் மிக முதல் முறையாக, ரஷ்யா இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை.