TNPSC Thervupettagam

முன் கூட்டிய எச்சரிக்கை அமைப்பு - காற்று மாசுபாடு

October 18 , 2018 2102 days 591 0
  • டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள காற்றின் தரத்தை மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கணித்துவிடக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை அரசு தொடங்கியுள்ளது.
  • இது குளிர்காலங்களில் ஏற்படும் அதிகபட்ச மாசுவைக் கட்டுப்படுத்துவதற்காக மாசுக்கட்டுப்பாட்டு கொள்கைகளை செம்மைப்படுத்துவதற்கு உதவும்.
  • இந்த காற்றுத் தரத்திற்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பானது மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
  • இந்த அமைப்பு PM2.5 (நுண்ணிய, சுவாசிக்கக்கூடிய துகள்கள்), PM10 (கரடுமுரடான துகள்கள்), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx), ஓசோன் (O3), சல்பர் டை ஆக்சைடு (SO2) மற்றும் கார்பன் மோனாக்சைடு (CO) ஆகியவற்றின் உமிழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும்.
  • மேலும் இவ்வமைப்பு செயற்கைக்கோள் படங்கள், தூசிப் படலங்கள் மற்றும் இதர காரணிகளைக் கொண்டு தீ பற்றிய தகவல்களையும் அளிக்கும்.
  • இந்த அமைப்பு, டெல்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வாயு மாசுவின் அளவினைக் கணக்கிடுவதற்காக அமெரிக்காவின் தேசிய வளிமண்டல மையத்திடமிருந்தும், பின்லாந்து வானிலை ஆய்வு நிறுவனத்திடமிருந்தும் மாதிரிகளை உபயோகப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்