மயானப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திப் பணியாற்றி வரும் மயானப் பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுக்குச் சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும் இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.