நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரிச் சட்டத்தின் விதிமுறைகளை ரத்து செய்வதற்கான ஒரு மசோதாவினைப் பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்தி உள்ளார்.
இந்த மசோதாவானது வோடஃபோன், கெயிர்ன் மற்றும் இதர சில நிறுவனங்களின் மீது 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் முந்தைய திருத்தங்களின் கீழ் கோரப்பட்ட கோரிக்கைகளைத் திரும்பப் பெறுகிறது.
இந்த மசோதாவானது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முனைகிறது.
2012 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதிக்கு முன்பு பரிமாற்றம் மேற்கொள்ளப் பட்டிருந்தால், முந்தைய காலத்தின் திருத்தங்களின் படி வருங்காலத்தில் எந்தவொரு மறைமுக இந்தியச் சொத்துப் பரிமாற்றத்திற்கும் வரி கோரிக்கை விடுக்கப்படாது என இந்த மசோதா கூறுகிறது.