TNPSC Thervupettagam

முன்னணி சிந்தனைச் சாவடி – இந்தியா

February 7 , 2018 2485 days 802 0
  • பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலுள்ள லௌடர் கல்வி நிறுவனத்தின் சிந்தனைச் சாவடி மற்றும் குடிமைச் சங்கங்கள் திட்டத்தில் (Think Tank and Civil Societies Programme) இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையமானது (Centre for Science and Environment) உலக அளவில் 16-வது முன்னணி சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கான சிந்தனைச் சாவடியாகவும், இந்தியாவின் முதல்நிலை சுற்றுச்சூழல் சிந்தனை சாவடியாகவும் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையமானது புது தில்லியில் அமைந்துள்ள ஓர் பொது நல ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை (Public Interest Research and Advocacy Organisation) நிறுவனமாகும்.
  • சுற்றுச்சூழல் சார்ந்த 5 முக்கிய களங்களில் இது தன் செயல்பாடுகளை கொண்டுள்ளது.
    • சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுக்கான மக்களை தொடர்பு கொள்ளுதல்
    • ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை
    • கல்வி மற்றும் பயிற்சி
    • அறிவு இணையவாயில் சேவை
    • மாசுபாடு கண்காணிப்பு
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையமானது “Down to Earth“ எனும் மாத இதழை வெளியிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்