TNPSC Thervupettagam

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சீனியர் ஜார்ஜ் H.W புஷ் மறைவு

December 2 , 2018 2104 days 645 0
  • முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94-வது வயதில் காலமானார்.
  • இவர் 41 வது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார் (1989-1993). மேலும் இவர் 43 வது அமெரிக்க ஜனாதிபதியான ஜூனியர் ஜார்ஜ்  W புஷ்ஷின் தந்தையும் ஆவார்.
  • ஒரே ஒரு முறை ஜனாதிபதியாக பதவி  வகித்த சீனியர் புஷ் 1991 ல் குவைத்தில் இருந்து பாலைவன புயல் நடவடிக்கை (Operation Desert Storm) மூலமாக ஈராக் நாட்டின் படைகளை வெளியேற்றிய 32 நாடுகளைக் கொண்ட கூட்டணியின்  பிரபல தலைவர் ஆவார்.
  • இவர் 1991 ல் மிக்கேல் கார்பச்சேவுடன் வரலாற்று சிறப்பு மிக்க ‘யுக்திசார்ந்த ஆயுதக் குறைப்பு உடன்படிக்கையை' கையெழுத்திட்டு சோவியத் யூனியனுடனான பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்