முன்னாள் அமைச்சர் அஸ்வனி குமாருக்கு ஜப்பான் விருது
July 30 , 2017 2719 days 1033 0
ஜப்பான்-இந்தியா உறவுகளை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய முன்னாள் அமைச்சர் அஸ்வனி குமாருக்கு கௌரவமிக்க 'ஆர்டர் ஆஃப் திரைசிங் சன்' (Order of the Rising Sun) என்றவிருது வழங்கப்பட்டது.
விருதின் பிரிவு : Grand Cordon of the Order of the Rising Sun
‘ஆர்டர் ரைசிங் சன்’ விருதுகளின் மிக உயரிய பிரிவு ‘கிராண்ட் கோர்டன்’ என்பது குறிப்பிடத்தக்கது . இதற்கு முன் இந்த விருதை இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாட்டாபெற்றுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பேரரசரும் பேரரசியும் இந்தியா வந்திருந்தபொழுது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு தூதராக அஸ்வனி குமார் பணியாற்றினார். அவர்களின் அரசுமுறை பயணம் வெற்றியடைய குமார் கணிசமான பங்காற்றினார் . மேலும் 2007ல் ஜப்பான்பிரதமர் ஷின்ஜோ அபேயின் அரசுமுறை இந்தியப் பயணத்தின்பொழுது, அஸ்வனி குமார் அவருக்கு உடன்செல்லும் அமைச்சராகப் (Accompanying Minister ) பணியாற்றினார்.
இந்திய வணிக மற்றும் தொழிலகக் கழகங்கள் கூட்டமைப்பின் (FICCI) பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களம் (இந்திய – ஜப்பான்), 2005 ஆம் ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமி வருகையின் போது நிறுவப்பட்டது . இதன் தலைவராக அஸ்வனி குமார் பணியாற்றியுள்ளார்.ஜப்பானின் STS குழுமத்தின் உறுப்பினராக இருந்தபோது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஜப்பான்-இந்திய உறவுகளை மேம்படுத்துவதில் குமார் பெரிய பங்களித்திருக்கிறார்.