TNPSC Thervupettagam

முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன்

February 3 , 2023 534 days 289 0
  • முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஒரு பிரபலச் சட்ட நிபுணருமான சாந்தி பூஷன் சமீபத்தில் காலமானார்.
  • 1975 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டதனை ரத்து செய்ய வழிவகுத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில் அரசியல்வாதியான ராஜ் நரேன் சார்பில் இவர் ஆஜரானார்.
  • வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜ் நரேன் Vs இந்திரா நேரு காந்தி வழக்கில், 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றமானது இந்திரா காந்தியின் வெற்றியை ரத்து செய்து மேலும் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரைத் தகுதி நீக்கம் செய்தது.
  • மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை சட்ட அமைச்சராக பூஷன் பணியாற்றினார்.
  • சட்ட அமைச்சராக அவர் 1978 ஆம் ஆண்டில் 44வது அரசியல் சட்டத் திருத்தத்தினை அறிமுகம் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்