TNPSC Thervupettagam

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் - MS கில்

October 21 , 2023 255 days 265 0
  • முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் சமீபத்தில் காலமானார்.
  • அவர் 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
  • அவர் தலைமை தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய போது தான், இந்தியத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) அறிமுகப்படுத்தியது.
  • அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்தியத் தேசிய காங்கிரஸில் இணைந்த அவர் 2004 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையில் பஞ்சாப் மாநிலப் பிரதிநிதியாகப் பணியாற்றி வெற்றிகரமாக இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து உள்ளார்.
  • அரசியலில் இணைந்த முதல் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் இவரே ஆவார்.
  • அந்தக் காலகட்டத்தில், அவர் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
  • கில் அவர்களுக்கு, தலைமைத் தேர்தல் ஆணையராக ஆற்றியப் பங்களிப்பிற்காக பத்ம விபூஷண் விருதும், கால்சா பந்தின் 300வது ஆண்டு விழாவில் ‘நிஷான்-இ-கல்சா’ விருதும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்