TNPSC Thervupettagam

முன்னாள் மத்திய அமைச்சர் யோகிந்தர் K. அலக்

December 10 , 2022 590 days 254 0
  • பிரபலப் பொருளாதார நிபுணரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகிந்தர் K அலக் காலமானார்.
  • அவர் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓய்வு பெற்ற மாண்புநிலை பேராசிரியராக இருந்தார்.
  • 1996 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு, 2000 ஆம் ஆண்டு வரை மேலவையில் ஒரு உறுப்பினராக பணியாற்றினார்.
  • அவர் 1996-98 ஆம் ஆண்டில் மத்தியத் திட்டமிடல் மற்றும் திட்ட அமலாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மின்சக்தி ஆகிய அமைச்சகங்களின் துணைநிலை அமைச்சராகப் பணியாற்றினார்.
  • மேலும் இவர் 2006 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஊரக மேலாண்மைக் கல்வி ஆனந்த் நிறுவனத்தின் (IRMA) தலைவராகவும் பணியாற்றினார்.
  • இவர் திட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளதோடு,  தொழில் துறை அமைச்சகத்தில் தொழில்துறைச் செலவினங்கள் மற்றும் விலைகள் பணியகத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்