முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்
August 20 , 2024
95 days
156
- முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் சமீபத்தில் காலமானார்.
- நட்வர் சிங் 1953 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1984 ஆம் ஆண்டில், அவர் தன் பதவியினை ராஜினாமா செய்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்.
- அத்தேர்தலில் வெற்றி பெற்று 1989 ஆம் ஆண்டு வரை மத்திய இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
- 2004 ஆம் ஆண்டில் மீண்டும் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற நட்வர் சிங், 18 மாதங்களுக்குப் பிறகு இராஜினாமா செய்தார்.
- 1966 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அவர் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.
- அவர் ‘The Legacy of Nehru: A Memorial Tribute' மற்றும் 'My China Diary 1956-88' உள்ளிட்ட பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
- 'One Life is Not Enough' என்ற தலைப்பில் அவரது சுயசரிதை வெளியிடப் பட்டுள்ளது.
- இவருக்கு 1984 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
Post Views:
156