TNPSC Thervupettagam

முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கலின் கீழ் ஸ்டார்ட் அப் துறை

August 12 , 2020 1441 days 603 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறைக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கல் (PSL - Priority sector lending) அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
  • இது ஸ்டார்ட் அப்களுக்கு கடன் வழங்குவதற்காக வேண்டி அதிக நிதியை ஏற்படுத்த உள்ளது.
  • இந்திய அரசு மற்றும் RBI ஆகியவை நாட்டின் அடிப்படைத் தேவைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான துறைகள் என்று கருதப்படும் துறைகளுக்கு மற்ற துறைகளை விட அதிக முன்னுரிமை அளிக்கும் என்பதை இது குறிக்கின்றது.
  • பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கான PSL விதிகளுக்காக வெளியிடப்பட்ட RBI வழிகாட்டுதல்களின்படி, 40% மொத்த நிகர வங்கிக் கடனானது முன்னுரிமைத் துறைக்கு வழங்கப் பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்