TNPSC Thervupettagam

முன்னுரிமை அளிக்கப்பட்ட இகாமா – சவுதி குடியுரிமை அட்டை

May 20 , 2019 1922 days 648 0
  • முதன்முறையாக சவுதி அரேபியாவின் அமைச்சரவையானது சில குறிப்பிட்ட வெளிநாட்டவர்களுக்கு நிலபுலன் போன்ற சொத்துக்களை வைத்துக் கொள்ள அனுமதியளிக்கும் பொருட்டு நிரந்தர வசிப்பிட உரிமையை வழங்க அனுமதியளித்துள்ளது.
  • அவர்கள் சவுதியின் ஆதரவாளர்கள் (காஃபீல்) உதவியின்றி தங்கள் குடும்பத்துடன் வசிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • இந்தப் புதிய முறைமைக்கு “முன்னுரிமை அளிக்கப்பட்ட இகாமா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த முன்னுரிமையளிக்கப்பட்ட இகாமா முறைமையின் கீழ் சொந்தமாக உள்ள வசிப்பிடத்தை வருடந்தோறும் புதுப்பிக்க முடியும்.
  • இந்தத் திட்டமானது பொதுவாக சவுதி குடியுரிமை அட்டை என அழைக்கப்படுகின்றது.
  • 3 வருடங்களுக்கு முன்னதாக இளவரசர் முகமது பின் சல்மானால் 2030-க்கான தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது முதன்முறையாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்