முன்னேறு நோக்குள்ள தொகுதி திட்டத்தின் ABP முதலாவது முன்னேறு நோக்குள்ள கழிமுகங்கள் பகுதி தரவரிசை
December 8 , 2023 352 days 233 0
முன்னேறு நோக்குள்ள தொகுதி திட்டத்தின் (ABP) முதலாவது முன்னேறு நோக்குள்ள கழிமுகங்கள் பகுதி தரவரிசையினை NITI ஆயோக் வெளியிட்டது.
5 கருப்பொருள்களாக தொகுக்கப்பட்ட 40 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை (KPIs) அடைவதில் தொகுதிகளின் செயல்திறன் மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தீர்மானிக்கப் பட்டது.
27 மாநிலங்கள் மற்றும் 4 ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 329 மாவட்டங்களில் இருந்து சுமார் 500 தொகுதிகள் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள திரியாணி தொகுதியானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தினைச் சேர்ந்த கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கௌசாம்பி தொகுதி பெற்றுள்ளது.
ABPயுடன் கூடுதலாக, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான ADP தரவரிசையும் அறிவிக்கப்பட்டது.
ராயகடா (ஒடிசா) மற்றும் ஜமுய் (பீகார்) ஆகியன இதில் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பெற்றன.