TNPSC Thervupettagam

முப்பது மீட்டர் தொலைநோக்கி

January 25 , 2020 1640 days 1164 0
  • அமெரிக்காவின் ஹவாய் தீவிலிருந்து முப்பது மீட்டர் தொலைநோக்கியை இடமாற்றம் செய்ய இந்தியா விரும்புகின்றது.
  • சுமார் 1,423 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தின் தேவைகளில் 10%ஐ இந்தியா முதலீடு செய்துள்ளது.
  • இந்த வானியல் ஆய்வகத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்ததும், இந்த முப்பது மீட்டர் தொலைநோக்கியானது (Thirty-Meter Telescope - TMT) உலகின் மிகப்பெரிய பொது நோக்கங்களுக்காகப் பயன்படும் வானியல் ஆய்வகங்களில் ஒன்றாகவும், எளிதில் பார்க்கக் கூடிய மிகப்பெரிய ஒளியியல் தொலைநோக்கிகளில் ஒன்றாகவும் மாற உள்ளது.
  • இது வானியலாளர்கள் பிரபஞ்சத்தின் வெளிப்புறங்களை ஆய்வு செய்வதற்கும் தொலைதூர நட்சத்திரங்கள் மற்றும் வெளிக் கோள்களை ஆய்வு செய்வதற்கும் அதிகமான விவரங்களைப் பெற அனுமதிக்கும்.
  • ஹவாய் தீவில் உள்ள செயல்பாடு அற்ற மோனோ கியா எரிமலையின் மீது TMT அமைக்கப்பட முன்மொழியப் பட்டுள்ளது.
  • இந்த எரிமலையானது ஹவாய் தீவின் பூர்வகுடி மக்களுக்கு ஒரு புனிதத் தளமாகும்.

TMT பற்றி

  • TMT என்பது மிகப் பெரிய தொலைநோக்கி கொண்ட ஒரு வானியல் ஆய்வுக்கூடமாகும்.
  • இது கனடா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அறிவியல்சார் அமைப்புகளால் நிதியளிக்கப்படும் ஒரு சர்வதேசத் திட்டமாகும்.
  • TMT ஆனது புற ஊதாக் கதிர்கள் முதல் அகச்சிவப்புக் கதிர்கள் வரையிலான வானியல் கண்காணிப்புகளுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. பெறப்படும் மங்கலான படங்களைச்  சரிசெய்ய உதவும் வகையில் ஒளியியல் கருவிகள் இதில் இடம் பெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்